தடுப்பூசி பணி : 13 நாட்களில் 67% உயர்வு

தடுப்பூசி போடுவதில் புதிய கொள்கை அறிமுகப்படுத்திய 13 நாட்களில் 6 கோடியே 77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
x
கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்...அதன்படி ஜூன் 21ஆம் தேதி முதல் புதிய கொள்கையின் படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.ஜூன் 20ஆம் தேதி வரை 28 கோடியே 36 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அடுத்த 13 நாட்களில் 67 சதவீதம் உயர்ந்து 34 கோடியே 46 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
குறிப்பாக ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை 6 கோடியே 77 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஜூன் 20 வரை 31 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த தினசரி தடுப்பூசி விகிதாச்சாரம், கடந்த 13 நாட்களில் 52 லட்சத்து 8 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் 8 மாநிலங்களில் தடுப்பூசி போடும் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது...13 நாட்களில் மட்டும் மத்திய பிரதேசத்தில் 257 சதவீதம், மகாராஷ்டிராவில் 94 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 86 சதவீதம், கர்நாடகாவில் 77 சதவீதம், ஒடிசாவில் 72 சதவீதம், தமிழ்நாட்டில் 60 சதவீதம், கேரளாவில் 55 சதவீதம் என தடுப்பூசி போடும் விகிதம் முந்தைய நாட்களை விட அதிகரித்துள்ளது.ஜூலை 3ம் தேதி வரையிலான கணக்கின்படி மத்திய பிரதேசத்தில் 29.67 சதவீதமும்,உத்தரபிரதேசத்தில் 22.59 சதவீதமும், கர்நாடகாவில் 21.10 சதவீதமும்,தெலங்கானாவில் 20.75 சதவீதமும், தமிழ்நாட்டில் 20.63 சதவீதமும் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்