படகில் கட்டி வைத்து நாய் மீது தாக்குதல் - நாய் துரத்தியதால் சிறுவர்கள் ஆத்திரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அடிமலை துறை பகுதியில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை, சிறுவர்கள் சிலர் நாட்டுப்படகில் கட்டி வைத்து கட்டையால் கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளனர்
படகில் கட்டி வைத்து நாய் மீது தாக்குதல் - நாய் துரத்தியதால் சிறுவர்கள் ஆத்திரம்
x
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அடிமலை துறை பகுதியில் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாயை, சிறுவர்கள் சிலர் நாட்டுப்படகில் கட்டி வைத்து கட்டையால் கொடூரமாக அடித்துக் கொன்றுள்ளனர். விசாரணையில் அந்த நாய் , சிறுவனை துரத்தியதால், 3 பேர் சேர்ந்து ஈவு இரக்கமில்லாமல் நாயை அடித்தே கொன்றுள்ளனர். இதனை வீடியோ பதிவு செய்த நாயின் உரிமையாளர் கிறிஸ்துராஜாவையும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக நாயின் உரிமையாளர் கிறிஸ்துராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மறுபுறம் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயங்கரனின் முயற்சியால் கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.Next Story

மேலும் செய்திகள்