ஜம்மு விமான தள தாக்குதல் வழக்கு - தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு

ஜம்மு விமானப்படை நிலைய தாக்குதல் வழக்கை உள்துறை அமைச்சகம் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்ததுள்ளது
x
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஜம்மு விமான நிலைய வளாகத்தில் உள்ள விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் 2  முறை குண்டு வெடித்தது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லையென்றாலும் இரு வீரர்கள் லேசாக காயமடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜம்முவிலுள்ள நார்வால் பகுதியில், 5 கிலோ வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்துக்கு லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புகளில் ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்நிலையில் ஜம்மு விமானப்படை நிலைய தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்