வெடிமருந்துடன் தீவிரவாதி கைது

ஜம்மு,காஷ்மீரில் உள்ள ஜம்மு விமான நிலைய தொழில் நுட்பப் பிரிவு பகுதியில் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
ஜம்மு,காஷ்மீரில் உள்ள ஜம்மு விமான நிலைய  தொழில் நுட்பப் பிரிவு பகுதியில் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு விமான நிலைய  தொழில் நுட்பப் பிரிவு பகுதியில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளது. இந்த சத்தம் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, விமான நிலையத்துக்கு வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு விரைந்துள்ளனர். இதனிடையே, நார்வால் பகுதியில் 5 கிலோ மேம்படுத்தப்பட்ட வெடி மருந்துகளை வைத்திருந்த தீவிரவாதியிடம்  இருந்து அதனை பறிமுதல் செய்த பாதுகாப்புப் படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்