ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்

ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் அரசியல் விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம்
x
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விவரிக்கிறது, இந்த தொகுப்பு... 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. 

காஷ்மீரையும், லடாக்கையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

மாநிலம் பிரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில், காஷ்மீரின் எதிர்காலம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள பிரதமர் மோடி இல்லத்தில் உயர்மட்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதில் பங்கேற்குமாறு 8 காஷ்மீர் கட்சிகளை சேர்ந்த 14 தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையே மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதி வரையறை செய்யும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது.

எனவே பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது குறித்தும், மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்தும் பேசப்படலாம் என பார்க்கப்படுகிறது.  

இந்த கூட்டத்தில் பங்கேற்க காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி என 6 கட்சிகள் அடங்கிய குப்கார் கூட்டணி சம்மதம் தெரிவித்து உள்ளது.

 மத்திய அரசின் அழைப்பை ஏற்பது குறித்து பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, என்ன பிரச்சினை பற்றி பேசப்படும் என்று மத்திய அரசு சொல்லவில்லை என்றும் என்ன பிரச்சினையாக இருந்தாலும், எங்களால் பேச முடியும் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தங்களது நிலைப்பாட்டை எடுத்து வைக்க முடியும் என்றும் நம்பிக்கையை தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ்  வலியுறுத்தியுள்ளது.

ஜனநாயக, அரசியல் சாசன நலன் கருதி அதை பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் ஏற்கவேண்டும் என்றும் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்