என் குழந்தைகளை கடத்த திட்டமிட்டார்" - கேரள முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டு

தனது குழந்தைகளை கடத்த திட்டமிட்டிருந்ததாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்த குற்றச்சாட்டை, கேரள காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன் மறுத்துள்ளார்.
என் குழந்தைகளை கடத்த திட்டமிட்டார் - கேரள முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டு
x
என் குழந்தைகளை கடத்த திட்டமிட்டார்" - கேரள முதல்வர் முன்வைத்த குற்றச்சாட்டு 

தனது குழந்தைகளை கடத்த திட்டமிட்டிருந்ததாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வைத்த குற்றச்சாட்டை, கேரள காங்கிரஸ்  மாநில தலைவர் சுதாகரன் மறுத்துள்ளார்.கேரள காங்கிரஸ் மாநில தலைவரான சுதாகரன், சமீபத்தில் அளித்த பேட்டியில், கண்ணூர் மாவட்டம், தலசேரியில் கல்லூரியில் படிக்கும் போது, சக மாணவரான பினராயி விஜயனை உதைத்துத் தள்ளியாக தெரிவித்திருந்தார், இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதுகுறித்து பினராயி விஜயனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தனது குழந்தைகள் பள்ளியில் படித்தபோது, அவர்களை சுதாகரன் கடத்த திட்டமிட்டிருந்ததாகவும், சமீபத்தில் மறைந்த தனது நண்பர் இதனை தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், இதுதொடர்பாக தனது மனைவியிடம் கூட சொல்லவில்லை எனவும் தெரிவித்தார். இதனை மறுத்துள்ள சுதாகரன், இதுபற்றி ஏன் போலீசாரிடம் புகாரளிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குழந்தைகளை பாதுகாக்கும் தாயிடம் கூட இதனை ஏன் தெரியப்படுத்தாமல் இருந்தார் என வினா எழுப்பியுள்ள சுதாகரன், தன்னை ஓா் அரசியல் குற்றவாளியாக சித்தரிப்பதுதான் பினராயி விஜயனின் நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்