"ஓய்வூதியதாரர்களை அலைக்கழிக்காதீர்" - வங்கிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஓய்வூதியங்களை விரைந்து வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியதாரர்களை அலைக்கழிக்காதீர் - வங்கிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
x
"ஓய்வூதியதாரர்களை அலைக்கழிக்காதீர்" - வங்கிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல் 

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஓய்வூதியங்களை விரைந்து வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.அனைத்து வங்கிகளுக்கும் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் எழுதியுள்ள கடிதத்தில், எதிர்பாராத விதமாக ஓய்வூதியதாரர் இறக்கும் பட்சத்தில், அவரது குடும்பத்தாரை அலைக்கழிக்க விடாமல் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இறப்பு சான்றிதழ் வழங்கிய உடன் எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அமைச்சர், கூட்டு கணக்கு இருந்தால் கடிதமோ அல்லது விண்ணப்பமோ கொடுத்தால் ஓய்வூதியத்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். கூட்டு கணக்கு இல்லாத பட்சத்தில், படிவம் 14-ல் இரண்டு சாட்சிகளுடன் கூடிய விண்ணப்பம் கொடுத்தால் குடும்ப ஓய்வூதியம் வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்