தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள்.. ட்ரோன் படப்பதிவை கட்டாயமாக்க முடிவு

அனைத்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களிலும், ட்ரோன் படப்பதிவை கட்டாயமாக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள்.. ட்ரோன் படப்பதிவை கட்டாயமாக்க முடிவு
x
தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள்.. ட்ரோன் படப்பதிவை கட்டாயமாக்க முடிவு 

அனைத்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களிலும், ட்ரோன் படப்பதிவை கட்டாயமாக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளில், வெளிப்படைத்தன்மை மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தை அதிகரிக்க, ட்ரோன் மூலமான படப்பதிவை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை மேற்பார்வை ஆலோசகரின் குழு தலைவர் முன்னிலையில், ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய இணையதளத்தின் டேட்டா லேக்கில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மேற்பார்வை ஆலோசகர்கள் இந்த வீடியோக்களை ஆய்வுசெய்து, மாதாந்திர அறிக்கையில் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் நிரந்தரமாக சேமிக்கப்படுவதால், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களின் விசாரணையின் போது, ஆதாரமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, நெட்வொர்க் சர்வே வாகனம் எனப்படும், நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட வாகனத்தின் மூலம், சாலையின் நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

Next Story

மேலும் செய்திகள்