திருமண விழாவில் யானை ரகளை - தெறித்து ஓடிய மணமகன் மற்றும் குடும்பத்தார்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில், திருமண விழாவில் பங்கேற்ற யானை ஒன்று, திடீரென ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமண விழாவில் யானை ரகளை - தெறித்து ஓடிய மணமகன் மற்றும் குடும்பத்தார்
x
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில், திருமண விழாவில் பங்கேற்ற யானை ஒன்று, திடீரென ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருமண விழாவில் மணமக்களை ஊர்வலமாக கொண்டு செல்வதற்காக யானை கொண்டு வரப்பட்டது. மணமகனை திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்த யானை, பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதும் நிதானம் இழந்தது. இதனால் மணமகன் மற்றும் அங்கிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனிடையே அங்கிருந்த கார்களையும், மற்ற பொருட்களையும் அந்த யானை தூக்கி பந்தாடியது. கடைசியாக யானையை அதன் பாகன் ஆசுவாசப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்