கேரளாவில் பருவமழை தீவிரம் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் வருகின்ற 16-ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவமழை தீவிரம் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
x
கேரளாவில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வருகின்ற 15-ஆம் தேதி பல்வேறு இடங்களில் கனமழை பெய்யுமென கூறப்பட்டுள்ளதால் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால், 16-ஆம் தேதி வரை கேரள கடற்கரைகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   


Next Story

மேலும் செய்திகள்