கேரள தங்க கடத்தல் வழக்கு - தொடரும் அதிரடி.. ஆதாரங்களை தேடும் விசாரணை ஆணையம்

கேரளாவில் அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிரான நீதி விசாரணையில் ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்கலாம் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கு - தொடரும் அதிரடி.. ஆதாரங்களை தேடும் விசாரணை ஆணையம்
x
கேரள தங்க கடத்தல் வழக்கு - தொடரும் அதிரடி.. ஆதாரங்களை தேடும் விசாரணை ஆணையம்  

கேரளாவில் அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிரான நீதி விசாரணையில் ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்கலாம் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணையின் போது முதல்வர் பெயரை கூற சொல்லி அமலாக்கத்துறை வற்புறுத்துவதாக ஸ்வப்னா குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சதித் திட்டம் தீட்டியதாக அவர்கள் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அமலாக்க இயக்குநரகத்திற்கு எதிராக நீதி விசாரணையை  கேரள அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரையும், அமைச்சர்களையும் சிக்கவைக்க சதி நடந்ததா? என்பது குறித்து ஆதாரங்கள் இருந்தால்  ஜூன் 26 ஆம் தேதிக்கு முன் ஆணையத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும்  இந்த வழக்கில் சாட்சியாக  சேர விரும்புவோர் கமிஷனை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்