அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை - மத்திய கல்வி அமைச்சர் அனுமதியுடன் வெளியீடு
பதிவு : ஜூன் 11, 2021, 09:33 AM
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதியுடன், 2019 - 20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியாகி உள்ளது.
அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை - மத்திய கல்வி அமைச்சர் அனுமதியுடன் வெளியீடு 

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அனுமதியுடன், 2019 - 20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை வெளியாகி உள்ளது.நாட்டில் உயர்கல்வியின் தற்போதைய நிலவரம் மீதான முக்கிய செயல்திறன் குறியீடுகள் இடம்பெற்றுள்ள இந்த அறிக்கையின்படி,கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை 11.4% வளர்ச்சியடைந்திருப்பதாகவும்,இந்தக் காலகட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18 புள்ளி 2 சதவீதம் அதிகரித்ததாகவும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் 2014 - 15ஆம் ஆண்டில் 24 புள்ளி 3 சதவீதமாக இருந்ததாகவும், 2019 - 20ஆம் ஆண்டில் 27 புள்ளி 1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2014 - 15 ஆம் ஆண்டில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சமாகவும், 2019-20ஆம் ஆண்டில் 3 கோடியே 85 லட்சமாகவும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2014-15ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 17 ஆயிரமாக இருந்த நிலையில், 2019-20ம் ஆண்டில் அது 2 லட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1849 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

48 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

25 views

பிற செய்திகள்

விமான படை வீரர்கள் பயிற்சி நிறைவு...ஹெலிகாப்டர், விமானங்களில் பறந்து சாகசம்

தெலங்கானா மாநிலம் துண்டிக்கல் (Dundigal) அகாடமியில் பயிற்சி முடித்த விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது

2 views

நேபாள நாட்டில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு... ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு

கனமழை காரணமாக நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

3 views

ஸ்விஸ் வங்கி முதலீடு அதிகரிப்பு விவகாரம் - ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்பு

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் கறுப்புப் பணம் இதுவரை இல்லாத அளவுக்கு, தற்போது அதிகரித்து உள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது

6 views

அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு.. வேகமாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

உத்தரகாண்ட் மலைப்பகுதியில் தொடரும் கனமழை காரணமாக அலகானந்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

4 views

காதலை ஏற்க மறுத்ததால் விபரீதம்.. சட்டக்கல்லூரி மாணவி வெட்டி படுகொலை

காதலை ஏற்க மறுத்த சட்டக்கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

14 views

மேயரை எல்கேஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலர்.. பதிலடி கொடுத்த பெண் மேயர்

கேரளாவில் திருவனந்தபுரம் மேயரை எல்கேஜி மாணவி என விமர்சித்த பாஜக கவுன்சிலருக்கு எதிராக கவுன்சில் கூட்டத்தில் ஆவேசத்தோடு பெண் மேயர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.