நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை - சிஏஜி அறிக்கை

கேரளாவில் 58 பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆயிரத்து796 கோடியே 55 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி அறிக்கை சமர்பித்துள்ளது.
நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை - சிஏஜி அறிக்கை
x
நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை - சிஏஜி அறிக்கை 

கேரளாவில் 58 பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆயிரத்து796 கோடியே 55 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி அறிக்கை சமர்பித்துள்ளது. கேரளாவில் சிஏஜி பல்வேறு துறைகளின் அறிக்கைகளை 2019 மார்ச் 31 வரை தாக்கல் செய்துள்ளது.இதில்  21.85 கோடி ரூபாய் நெல் பதப்படுத்தும் திறன் பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையின்படி, பொது விநியோக முறை மூலம் குறிப்பிடத்தக்க அளவு அரிசி வழங்கப்படவில்லை,இதன் விளைவாக நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை, என சிஏஜி அறிக்கை கூறகிறது.  ஷாப்பிங் வளாகத்தை நிர்மாணிப்பதில் 58 பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆயிரத்து 796 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கே.எஸ்.ஆர்.டி.சி ஆயிரத்து 431 கோடி இழப்புடன் முன்னணியில் உள்ளதாகவும்,செயலிழந்த 16 பொதுத்துறை நிறுவனங்களை மூட சிஏஜி பரிந்துரைத்துள்ளது. ஆய்வு அறிக்கைகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளுக்கு இணங்க நிதி அமைச்சகம் தவறிவிட்டது என்றும் சிஏஜி கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்