"டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்கு 200 கோடி கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்
x
"டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்
 
இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்கு 200 கோடி கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.அருணாச்சலபிரதேசம் மாநிலத்தில் பாஜகவின் புதிய கட்சி அலுவலகத்திற்கான திறப்பு விழா நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக, இதனை திறந்து வைத்துப் பேசிய ஜேபி நட்டா, கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மத்திய அரசின் செயல்பாடுகளை பாராட்டிப் பேசினார். பின்னர், ஒரு மாதத்தில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வரை தற்போது உற்பத்தி செய்யப்படுவதாகவும், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த எண்ணிக்கை 6 முதல் 7 கோடியாக அதிகரிக்கும் எனவும், செப்டம்பர் மாதத்தில் இது 10 கோடியாக அதிகரித்திருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் இரண்டு தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 13 நிறுவனங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜேபிநட்டா, டிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரிக்கக் கூடும் என்றார். இதேபோல், டிசம்பர் மாதத்திற்குள் 200 கோடி தடுப்பூசி வரை உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்