குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் - மத்திய சுகாதார இயக்குனரகம் வெளியீடு

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

புதிய வழிகாட்டு நெரிமுறைகளின் படி, மிதமான பாதிப்பு உள்ள சிறார்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் வழங்குவது தீங்கு விளைவிக்கக் கூடும் என்பதால், 

ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறார்களுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க வேண்டாம் என்று புதிய நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை வழங்கக் கூடாது பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மேலும், 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் முக‌க்கவசம் அணிய தேவையில்லை என மத்திய சுகாதார சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்