2 கிலோ போதை பொருள் பறிமுதல் - பெண் உள்பட 4 பேர் கைது

கேரளாவில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியில் ஒரு கும்பல், போதை பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கும்பலை பிடிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அங்கமாலி பகுதியில் தனிப்படை நடத்திய அதிரடி சோதனையில் சிவ பிரசாத், ஆபித் என இருவர் சிக்கினர். அவர்களிடம்  இருந்து 25 கோடி ரூபாய் மதிப்பிலான, 2 கிலோ எடை கொண்ட எம்பிஎம்ஏ என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இதே போல பெங்களூரு கன்னியாகுமரி விரைவு ரயில் ஆலுவா வந்தபோது 22 கிராம் எம்பிஎம்ஏ போதைப் பொருளுடன் சனூப் என்பவர் சிக்கினார். உடன் வந்த அவரது மனைவி ரிஸ்வானாவும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது கேரளாவின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்