"தினசரி கொரோனா பாதிப்பில் சரிவு" : 2 லட்சத்திற்கும் கீழ் பதிவானது- இணை செயலாளர் லாவ் அகர்வால்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 8 நாட்களில் 2 லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தினசரி கொரோனா பாதிப்பில் சரிவு : 2 லட்சத்திற்கும் கீழ் பதிவானது-  இணை செயலாளர் லாவ் அகர்வால்
x
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 8 நாட்களில் 2 லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவற்றில்  66 சதவீதம் பாதிப்பு ஐந்து மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளது என்றும் 33 சதவீதம் பாதிப்பு 31 மாநிலங்களிலிருந்து பதிவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 257 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-க்கு மேல் பதிவாகியுள்ளது என லாவ் அகர்வால் கூறியுள்ளார். முன் களப் பணியாளர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட 22 கோடியே 41 லட்சம் நபர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக என்றும் அவர் தெரிவித்தார். இதில் 18 வயது முதல் 45 வயது பிரிவில் 2 கோடியே 43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்