ஆக்சிஜன் விநியோகம் 10 ஆயிரம் மெட்ரிக் டன்னை தாண்டியது - இந்தியன் ரயில்வே தகவல்

தென் மாநிலங்களில்,எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த திரவ மருத்துவம் ஆக்சிஜன், 10 ஆயிரம் மெட்ரிக் டன்னை தாண்டியதாக இந்தியன் ரயிவே தெரிவித்துள்ளது.
x
ஆக்சிஜன் விநியோகம் 10 ஆயிரம் மெட்ரிக் டன்னை தாண்டியது - இந்தியன் ரயில்வே தகவல் 

தென் மாநிலங்களில்,எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த திரவ மருத்துவம் ஆக்சிஜன், 10 ஆயிரம் மெட்ரிக் டன்னை தாண்டியதாக இந்தியன் ரயிவே தெரிவித்துள்ளது.ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் மூலம் இதுவரை, ஆயிரத்து 483 க்கும் மேற்பட்ட டேங்கர்களில், 24 ஆயிரத்து 840 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.359 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்கள் இதுவரை தங்கள் பயணத்தை முடித்து பல்வேறு மாநிலங்களுக்கு நிவாரணம் அளித்துள்ளதாக ரயில்வேதுறை கூறியுள்ளது.தென் மாநிலங்களில், விநியோகிக்கப்பட்டு வந்த திரவ மருத்துவ ஆக்சிஜன், 10 ஆயிரம் மெட்ரிக் டன்னை தாண்டியதாக தெரிவித்துள்ளது.தென் மாநிலங்களில் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள் தலா 2500 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை பெற்றதாகவும்,உத்தரகண்ட், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம்,  டெல்லி, உத்தரபிரதேசம், உள்ளிட்ட  15 மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் சென்றடைந்ததாக ரயில்வே துரை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்