சர்வதேச நாடுகளுக்கு 2.5 கோடி தடுப்பூசிகள் - இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தகவல்

இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்காக இரண்டரை கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா அனுப்ப உள்ளதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் தெரிவித்துள்ளார்
சர்வதேச நாடுகளுக்கு 2.5 கோடி தடுப்பூசிகள் - இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தகவல்
x
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்காக  இரண்டரை கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா   அனுப்ப உள்ளதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் தெரிவித்துள்ளார்

டெல்லியில் செய்தியாள்ரகளை சந்தித்த அவர், அமெரிக்க அதிபர் பைடன் பதவியேற்றுள்ள 100 நாட்களில் அவருடன் பிரதமர் மோடி 3 முறை தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது கொரோனா கட்டுப்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்,. மேலும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் பேசிய மோடி அவரை, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்,. அப்போது கொரோனா காலக்கட்டத்தில் அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு மோடி நன்றி தெரிவித்ததாகவும் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார் ,. இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு 2 பிரிவுகளில்  இரண்டரை கோடி தடுப்பூசிகளை அமெரிக்கா  அனுப்ப உள்ளதாகவும்  அந்த இரு பிரிவுகளிலும் இந்தியா உள்ளது என்றும்  தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார்,.

Next Story

மேலும் செய்திகள்