ரசாயன தொழிற்சாலையில் வாயுக்கசிவு - பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பாட்லாப்பூர் பகுதியில் ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது.
ரசாயன தொழிற்சாலையில் வாயுக்கசிவு - பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல்
x
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பாட்லாப்பூர் பகுதியில் ரசாயன தொழிற்சாலை அமைந்துள்ளது. தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால், ரசாயன வாயு கலந்த காற்றை சுவாசித்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புப்படையினர்  ஒரு மணி நேரத்தில் வாயுக்கசிவை நிறுத்தினர். மேலும், மூச்சுத்திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்ட மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்