5ஜி அலைக்கற்றை சேவைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு : பாட்டுப்பாடி குறுக்கீடு - கோபமடைந்த நீதிபதி

5ஜி அலைக்கற்றை சேவைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு விசாரணையின் போது, பாட்டுப்பாடி இடையூறு செய்த நபரால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கோபமடைந்தார்.
x
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சேவைக்கு தடை விதிக்கக் கோரி, பாலிவுட் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவில், தற்போதுள்ள ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சை விட, 5ஜி சேவைக்கான கதிர்வீச்சு 10 முதல் 100 மடங்கு வரை அதிகமாக இருக்கும் என்றும்,  இதனால், பறவைகள், விலங்குகள் என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். 

இது தொடர்பான விசாரணை காணொலி காட்சி வாயிலாக, நீதிபதி ஜே.ஆர்.மித்தா முன்னிலையில்  நடைபெற்ற நிலையில், மனுதாரரான ஜுஹி சாவ்லா நடித்த திரைப்பட பாடல்களை யாரோ பாடி குறுக்கீடு செய்தனர். 

மூன்று முறை இது நீடித்ததால் கோபமடைந்த நீதிபதி, நீதிமன்ற விசாரணையின் போது பாட்டுப்பாடி இடையூறு ஏற்படுத்திய நபரை கண்டுபிடித்து, நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார். 

இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களை பதிவு செய்த நீதிபதி, இந்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்