5-ஜி தொழில்நுட்பம் ஆரோக்கியத்திற்கு தீங்கா? - ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது என்ன...?

5-ஜி தொழில்நுட்பம் உங்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துமா...? ஆய்வுகள் சொல்வது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்...
5-ஜி தொழில்நுட்பம் ஆரோக்கியத்திற்கு தீங்கா? - ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது என்ன...?
x
நாட்டில் தற்போது மொபைல் போன்களில் 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறையான அதிவேக 5ஜி சேவையை சோதித்து பார்க்க  தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.இதற்கிடையே 5-ஜி தொழில்நுட்பத்தால் வெளியாகும் கதிர்வீச்சு மனிதர்கள், விலங்குகள், பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்தவகையில் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா 5-ஜி தொழில்நுட்பத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். கதிர்வீச்சால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து நேரிடும் என ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறும் நிலையில், ஆராய்ச்சியாளர்கள் கூறுவது மாறாக இருக்கிறது.இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் ஸ்டாரோபின்ஸ்கி, 5-ஜி தொழில்நுட்பம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பரிமாணம் மட்டுமே என்கிறார்.அமெரிக்காவின் ஓரிகான் பல்கலைக்கழகம் மனித மரபணு கொண்ட ஜீப்ரா மீன்களிடம் இதுகுறித்த ஆய்வை கடந்த ஆண்டு மேற்கொண்டுள்ளது.  ஆய்வு முடிவில் 5 ஜி தொழில்நுட்ப மொபைல்கள் வெளியிடும் 3.5 ஜிகாஹெர்ட்ஸ் கதிர்வீச்சால் மீன்களின் கரு முட்டைகள் உருவாக்கத்தில் எந்தஒரு பாதிப்பும் காணப்படவில்லை என்றும் ஆனால் திடீரென எழும் அதிகப்பட்ச அதிர்வெண் ஒலிக்கு எதிர்வினை ஆற்றும் கருமுட்டைகளில் கதிர்வீச்சின் தாக்கம் காணப்படுகிறது, இதுகுறித்த மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிக்கும் சூழலில், மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக ஆதாரங்கள் இல்லை என பேராசிரியர் டேவிட் கூறுகிறார். அதிகப்படியான கதிர்வீச்சு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றாலும் தகவல்தொடர்பு தொழில்நுட்ப கதிர்வீச்சுக்கு பாதுகாப்பு வழிக்காட்டுதல் உள்ளது என்றும்
5 ஜி தொழில்நுட்பம் பாதுகாப்பானவை எனவும் டேவிட் உறுதியளித்து உள்ளார்.இருப்பினும் கூடுதல் பாதுகாப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு உத்தரவாதம் அளிக்கலாம் எனவும் பேராசிரியர் டேவிட் சுட்டிக்காட்டியுள்ளார். 
இதற்கிடையே அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகம், 5-ஜி தொழில்நுட்பம் தவறான வானிலை முன்னறிவிப்புக்கு வழிவகை செய்யும் என தன்னுடைய ஆய்வு முடிவில் தெரிவித்து இருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்