மின்சார வாகனங்களுக்கு கூடுதல் சலுகை - பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்க முடிவு

பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கு கூடுதல் சலுகை - பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்க முடிவு
x
பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பேட்டரியால் இயங்கும் வாகனங்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிவிப்பாணையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பொது மக்களின் கருத்துகளை கோரியுள்ள மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை வரும் 27 ஆம் தேதிக்குள் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்