12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு

12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் ரத்து - பிரதமர் மோடி அறிவிப்பு
x
12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நடப்பாண்டியில் சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, பிரதமர் தலைமையில் காணொலி வாயிலாக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், பிரதமரின் முதன்மை செயலாளர், பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி செயலாளர் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.சி.யின் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், 

இதுவரை தேர்வுகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைகள் மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி, மாணவர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், கொரோனா தொற்று பரவல் மாணவர்களின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது என தெரிவித்த பிரதமர், மாணவர்கள், பெற்றொர், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

எனவே, இத்தகைய மன அழுத்தம் நிறைந்த சூழலில் மாணவர்களை தேர்வெழுதுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என தெரிவித்த பிரதமர் மோடி, 

மாணவர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது என திட்டமாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்