தடுப்பூசி குறித்து செயலி மூலம் அறியலாம் - மத்திய அரசு விளக்கம்

கோவின் செயலி வாயிலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் திரட்டப்படுவதில்லை என, மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
தடுப்பூசி குறித்து செயலி மூலம் அறியலாம் - மத்திய அரசு விளக்கம்
x
கோவின் செயலி நாடு முழுவதும்  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பதிவு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளது. இந்த செயலி முதல் தவணை தடுப்பூசிக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் கால வரம்பு மற்றும் அரசு அவ்வப்போது அறிவிக்கும் வழிகாட்டுதல்களை செயல்படுத்த சில விவரங்களை மட்டும் கேட்கும் என கூறியுள்ளது.
அதோடு, புதிய வழிகாட்டுதல் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் என, மத்திய சுகாதார அமைச்சகம்  விளக்கம் அளித்துள்ளது. உறுதிசெய்யப்பட்ட நேரத்தில் பயனாளர்களுக்கு தடுப்பூசி கிடைக்காவிட்டால், இந்த செயலி மூலம் கண்டறிய முடியும் என்றும் கூறியுள்ளது. கோவின் செயலி வாயிலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் திரட்டப்படுவதில்லை எனவும் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்