செப். 6 முதல் 16 வரை 11ம் வகுப்பு தேர்வு - கேரளா முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வை, செப்டம்பர் 6 முதல் 16 -ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
செப். 6 முதல் 16 வரை 11ம் வகுப்பு தேர்வு - கேரளா முதல்வர் பினராயி விஜயன் தகவல்
x
கொரோனா தொற்றால், கடந்த ஆண்டு 10ம்- வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கும் மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்றது. மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்களாக கல்வித்துறை அறிவித்தது. ஆனால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கும் ஏப்ரல் 8 தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. பத்தாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வை ரத்து செய்துள்ளது. பனிரெண்டாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்களாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிளஸ் ஒன் தேர்வை செப்டம்பர் 6 முதல் 16 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக  கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார்.   


Next Story

மேலும் செய்திகள்