"கொரோனாவை குணப்படுத்தும் நாட்டு மருந்து" - ஆந்திர அரசு அனுமதி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு வழங்கப்பட்ட நாட்டு மருந்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
x
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு வழங்கப்பட்ட நாட்டு மருந்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபட்டினத்தைச் சேர்ந்தவர் ஆனந்தய்யா. இவர் தயாரித்த நாட்டு மருந்து, கொரோனா தொற்று நோயை குணப்படுத்துவதாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கானோர் ஆனந்தய்யாவின் மருந்தைப் பெற, கிருஷ்ணாபட்டினத்திற்கு படையெடுத்தனர். இந்நிலையில், ஆந்திர மாநில அரசு இதில் தலையிட்டு, ஆனந்தய்யா தயாரித்த மருந்தில் பக்க விளைவுகள் உள்ளதா என்ற கோணத்தில், ஆய்வு செய்ய உத்தரவிட்டு, மருந்தின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆனந்தய்யா தயாரித்த மூன்று விதமான மருந்துகள் குறித்து ஐதராபாத்தில் ஆய்வு நடைபெற்ற நிலையில், கண்ணில் விடும் ஒருவகை சொட்டு மருந்தைத் தவிர மற்ற இரண்டு மருந்துகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து கூறியுள்ள ஆனந்தய்யா, தகுந்த மூலிகைகள் கிடைத்தவுடன் மருந்து தயாரிக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்