அதிகம் தடுப்பூசி செலுத்திய முதல் 10 மாநிலங்கள்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய அளவிலான பட்டியலில் தமிழகம் 11வது இடத்தில் தொடர்கிறது
x
நாடு முழுவதும், மே 31 காலை வரை 21 கோடியே 31 லட்சம் தடுப்பூசிகள் போடுப்பட்டுள்ளன. 16 கோடியே 86 லட்சம் மக்களுக்கு ஒரு டோஸும், 4 கோடியே 45 லட்சம் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

12 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிராவில் இதுவரை 2 கோடியே 23 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் 1 கோடியே 80 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

6 கோடியே 43 லட்சம் மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், இதுவரை 1 கோடியே  69 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

8 கோடியே 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட ராஜஸ்தானில் இதுவரை 1 கோடியே  68 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

10 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில், இதுவரை 1 கோடியே  44 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

6 கோடியே 83 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவில், இதுவரை 1 கோடியே  34 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

8 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட மத்திய பிரதேசத்தில், இதுவரை 1 கோடியே 8 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 12 புள்ளி 7 கோடி மக்கள் தொகை கொண்ட பீகாரில், இதுவரை 1 கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 5 கோடியே 44 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஆந்திராவில், இதுவரை 97 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

3 புள்ளி 6 கோடி மக்கள் தொகை கொண்ட கேரளாவில், இதுவரை 92 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 7 கோடியே 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், இதுவரை 88 லட்சத்து 91 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்