இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒரே நாளில் 3 ஆயிரத்து 460 பேர் உயிரிழந்துள்ளனர்.
x
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது... 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒரே நாளில் 3 ஆயிரத்து 460 பேர் உயிரிழந்துள்ளனர்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 553 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 94ஆயிரத்து 800ஆக  உயர்ந்துள்ளது.3 ஆயிரத்து 460 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 25 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 309 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 21 லட்சத்து 14ஆயிரத்து 508 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை 21 புள்ளி 89 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்