வருவாய்க்காக ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தம்.. பலரின் உயிரைக் காப்பாற்றிய வார்டு பாய்

தங்களுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வருவாய்க்காக ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தம்..  பலரின் உயிரைக் காப்பாற்றிய வார்டு பாய்
x
வருவாய்க்காக ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தம்..  பலரின் உயிரைக் காப்பாற்றிய வார்டு பாய்  

தங்களுக்கு வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வினியோகிக்கப்படும் ஆக்சிஜன் சப்ளையில் இன்று காலை திடீரென தடை ஏற்பட்டது. இதனை கவனித்த அங்கிருந்த வார்டு பாய் ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்கு ஓடியுள்ளார்.  அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிலர், ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதை பார்த்துள்ளார். உடனடியாக ஆக்சிஜன் சப்ளை தொடர செய்த வார்டு பாய் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செயல் பற்றி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.மருத்துவமனை கண்காணிப்பாளர்  புகாரின் பேரில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் 3  பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார், தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்களுக்கு வருவாய் இல்லாததால்,ஆக்சிஜன் சப்ளையை துண்டித்தால் நோயாளிகள் அபாய கட்டத்தை அடைந்து வேறு மருத்துவமனைக்கு செல்ல முயற்சி செய்வார்கள் அல்லது இறந்து போவார்கள் அப்போது வருமானம் கிடைக்கும் என்ற அடிப்படையில் செய்ததாக தெரிவித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வரும் நிலையில், வாழ்வாதாரத்திற்காக மனிதன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை உணர்ந்து, அரசுகள் வாழவாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்