ஹால்மார்க் முத்திரை - ஜூன் 15 முதல் அமல்

தங்க நகைகள் மீது ஹால்மார்க் முத்திரை இடம்பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை நடமுறைப்படுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
x
ஹால்மார்க் முத்திரை - ஜூன் 15 முதல் அமல்  

 தங்க நகைகள் மீது ஹால்மார்க் முத்திரை இடம்பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அதனை நடமுறைப்படுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தங்க நகைகளுக்கான கட்டாய ஹால்மார்க் முத்திரை நடைமுறை ஜூன் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது.முன்னதாக ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை இடம்பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பெரும் தொற்று காலத்தில் இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த கூடுதல் கால அவகாசம் தேவை என தங்க நகை வியாபாளிகள், உற்பத்தியாளர்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட மத்திய அரசு, கால அவகாசத்தை நீட்டித்து, புதிய நடைமுறை ஜூன் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.முன்னதாக  தங்க நகைகளின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தை அதிகரிக்க,தங்க நகைகள் மற்றும் கலை பொருட்கள் மீது ஹால்மார்க் முத்திரை இடம்பெற செய்வது கட்டாயம் என கடந்த ஜனவரி 15 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.இருப்பினும் ஹால்மார்க் முத்திரை இடம் பெறாத பழைய தங்க நகைகளை மாற்றி அமைக்க இந்த காலக்கெடு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.தங்க நகைகளின் மீது ஹால்மார்க் முத்திரை இடம் பெறச் செய்வதன் மூலம் நுகர்வோர் மற்றும் தங்க நகை வாங்குபவர்கள் சரியான நகைகளை தேர்வு செய்வது உறுதி செய்யப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் மொத்த தங்க நகைகளில் 30 சதவீதம் மட்டுமே ஹால்மார்க் முத்திரை கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்