இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பலி எண்ணிக்கை அதிகம்

இந்தியாவில் தினசரி புதிய கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பலி எண்ணிக்கை குறையவில்லை.
x
இந்தியாவில் தினசரி புதிய கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பலி எண்ணிக்கை குறையவில்லை. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரங்களில் கொரோனா தொற்றுக்கு புதிதாக 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்புக்கு 4 ஆயிரத்து 454 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் இதனால் இதுவரையில் இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை மொத்தமாக இந்தியாவில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 720 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் தொற்றிலிருந்து  3 லட்சத்து 2 ஆயிரத்து 544 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் 27 லட்சத்து 20 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இந்தியா முழுவதும் இதுவரையில் 19 கோடியே 60  லட்சத்து 51 ஆயிரத்து 962  தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.





Next Story

மேலும் செய்திகள்