வங்கக்கடலில் உருவானது யாஸ் புயல் - வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு வங்கம் தீக பகுதிக்கு தெற்கே தென்கிழக்கே 630 கி.மீ.தொலைவில் நிலை கொண்ட புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும்.
x
வங்கக்கடலில் உருவானது 'யாஸ்' புயல் வங்கக்கடலில் உருவானது 'யாஸ்' புயல் - அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும்


மேற்கு வங்கம் தீக பகுதிக்கு தெற்கே தென்கிழக்கே 630 கி.மீ.தொலைவில் நிலை கொண்ட புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும்.வங்கக்கடலில் யாஸ் புயல் உருவாகி இருக்கும் நிலையில் அது அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக உருப்பெற்று கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று இன்று காலை புயலாக உருமாறியுள்ளது.இது ஒடிசா மாநிலம் பாரதீப்பிற்கு தெற்கு -  தென்கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கம் தீக பகுதிக்கு தெற்கே தென்கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடைந்து ஒடிசா மாநிலம் பாரதீப்பிற்கும் மேற்கு வங்கம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.புயல் கரையை கடக்கும் போது அதி தீவிர புயலாக மணிக்கு 155 கி.மீ - 165 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 180 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்