உலகளாவிய டெண்டர் கோரியது கேரளா... 3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் வாங்க முடிவு

கேரள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், 3 கோடி டோஸ் தடுப்பு மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் வெளியிட்டுள்ளது
உலகளாவிய டெண்டர் கோரியது கேரளா... 3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் வாங்க முடிவு
x
உலகளாவிய டெண்டர் கோரியது கேரளா... 3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் வாங்க முடிவு 


கேரள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில்,  3 கோடி டோஸ் தடுப்பு மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் வெளியிட்டுள்ளது அமம்மாநில அரசு.கேரளாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்த  பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது,  3 கோடி டோஸ் கொரோனா தொற்று தடுப்பு மருந்து வாங்குவதற்கு உலகளாவிய டெண்டரை வெளியிட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி டெண்டர் திறக்கும்போது எந்தெந்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்று இருக்கின்றன என்பது தெரியவரும். கேரள மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. கேரளாவின் தேவைக்கேற்ப கொரோனா தடுப்பு மருந்தை ஒன்றிய அரசால் வழங்க இயலாத நிலையில் இந்த முடிவை கேரள அரசு எடுத்து உள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஒடிசா  தமிழ்நாடு போன்ற பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்