கேரள கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு - வீடுகளுக்குள் புகுந்த கடல்நீர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தொடரும் கடல் அரிப்பால், கடலோர மக்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
கேரள கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு - வீடுகளுக்குள் புகுந்த கடல்நீர்
x
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தொடரும் கடல் அரிப்பால், கடலோர மக்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

கேரளாவில் பலத்த காற்றுடன் கனமழை தொடரும் நிலையில், மறுபுறம் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் திருவனந்தபுரம் அருகே அஞ்சு தெங்கு, பூந்துறை, பெருமாந்துறை போன்ற கடலோர கிராமங்களில் உள்ள  பல வீடுகளில் கடல் நீர் புகுந்துள்ளது. கடல்நீர் புகுந்த  வீடுகளை சேர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டு வருகின்றனர். இதேபோன்று கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள  கடலோர கிராமங்களிலும் இதேநிலை காணப்படுகிறது. இதனையடுத்து  அப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்