கேரளாவில் திங்கட்கிழமை முதல் 18வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் திங்கள் முதல் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் முன்பதிவு இன்று தொடங்கும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் திங்கட்கிழமை முதல் 18வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
x
கேரளாவில் திங்கள் முதல் 18  வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் முன்பதிவு இன்று தொடங்கும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு, 84 நாட்கள் முடித்த பின்னரே இரண்டாவது டோஸ் போடப்படும் என தெரிவித்தார்.கேரளாவில் 23ம் தேதி வரை முழுஊரடங்கு/மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு/முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு/ரேசன் கடைகளில் இலவச உணவு பொருட்கள்

கேரளாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு 23ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து பினராயி விஜயன் உத்தரவிட்டார். ரேசன் கடைகளில் இலவச உணவு தானிய பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம் மாவட்டங்களில் மூன்று அடுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்