கொரோனா தினசரி பாதிப்பு - சரிபாதியாக சரிவு

டெல்லியில் தினசரி தொற்று பாதிப்பு சரிபாதியாக குறைந்து உள்ள நிலையிலும், இறப்பு விகிதத்தில் மாற்றமில்லாதது கவலை அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தினசரி பாதிப்பு - சரிபாதியாக சரிவு
x
தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 10,489 பேருக்கு புதிதாக  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனையடுத்து, டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,72,475 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,189 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் டெல்லியில் 77,717 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 308 பேர் பலியானதை அடுத்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 20,618ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று விகிதம்  14.24 ஆக சரிந்துள்ள அதே நேரத்தில், பலி எண்ணிக்கையில் இருப்பது கவலை அளிக்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்