ஆக்சிஜன் விநியோகம் குறித்து ஆலோசனை... பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்

பிரதமர் மோடி, மாநிலங்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டறிந்தார்.
ஆக்சிஜன் விநியோகம் குறித்து ஆலோசனை... பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்
x
ஆக்சிஜன் விநியோகம் குறித்து ஆலோசனை... பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்

பிரதமர் மோடி, மாநிலங்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டறிந்தார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், காணொலி காட்சி மூலம் நடந்தது. அப்போது, ஆக்சிஜன் விநியோகம் மற்றும் மருந்து பொருட்கள் கையிருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு ஆக்சிஜன் பகிர்ந்தளிக்கப்படும் முறை குறித்து, பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் ரெம்டெசிவிர் மருந்து இறக்குமதி மற்றும் உற்பத்தி குறித்தும் அதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார். வென்டிலேட்டர்கள் தேவை குறித்து, மாநில அரசுகள் முன்கூட்டியே மத்திய அரசுக்கு தகவல்களை தர வேண்டும் என்றும் உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்