20-ம் தேதி அமைச்சரவை பதவி ஏற்பு - கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆலோசனை

கேரளாவில் அமைச்சரவையில் இட ஒதுக்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்றும், நாளையும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொள்கின்றனர்.
20-ம் தேதி அமைச்சரவை பதவி ஏற்பு - கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆலோசனை
x
கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி 99 இடங்களில் வென்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக முதல்வர் பினராஜி விஜயன் முதல் எம்.எல்.ஏ. வரையில் யாரும் பதவி ஏற்கவில்லை. இந்நிலையில் வரும் 20-ம் தேதி திருவனந்தபுரத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அமைச்சரவையில் இட ஒதுக்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்றும், நாளையும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொள்கின்றனர். அமைச்சரவை பதவி ஏற்பை தொடர்ந்து 24-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தவும், 25-ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடத்தவும் கம்யூனிஸ்ட் கூட்டணி தரப்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்