மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் விவரங்கள் வெளியீடு

இதுவரை அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசி குறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் விவரங்கள் வெளியீடு
x
இதுவரை அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள தடுப்பூசி  குறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் 84 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாகவும், 

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 17 புள்ளி 49 கோடி கொரோனோ தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவற்றுடன் இன்னும் மூன்று நாட்களுக்குள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 54 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும்

தமிழகத்துக்கு இதுவரை  74 லட்சத்து 3 ஆயிரத்து 950 குப்பி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் 66 லட்சத்து 74 ஆயிரத்து 970 குப்பி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்

7 லட்சத்து 28 ஆயிரத்து 980 குப்பி தடுப்பூசிகள் தமிழக அரசிடம் கையிருப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளாது.

தமிழகத்துக்கு 2 லட்சத்து 39ஆயிரத்து 60 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்