புதுச்சேரியில் புதிதாக 1,746 பேருக்கு தொற்று

புதுச்சேரியில் இன்று புதிதாக 1,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புதிதாக 1,746 பேருக்கு தொற்று
x
புதுச்சேரியில் புதிதாக 1,746 பேருக்கு தொற்று

புதுச்சேரியில் இன்று புதிதாக 1,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 19 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று மட்டும் 1,079 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,373 ஆகவும், அதில் இதுவரை 54,375 பேர் குணமடைந்துள்ளனர்.மேலும், இன்று உயிரிழந்த 19 பேரையும் சேர்த்து, இதுவரை 920 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்