கொரோனா தடுப்பு - பிரதமர் மோடி ஆலோசனை

தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்களை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா தடுப்பு - பிரதமர் மோடி ஆலோசனை
x
தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்களை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் நிலவும் கொரோனா சூழல் மற்றும் அதை எதிர்கொள்ளும் சுகாதார செயல்பாடுகள் குறித்து மூத்த அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஹர்ஷவர்தன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

அதில், சுகாதார கட்டமைப்புகளை துரிதப்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என பிரதமர் அதில், அறிவுறுத்தினார். தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் உற்பத்தி, தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உள்ளிட்டவை குறித்து பேசிப்பட்டன. தடுப்பூசி செலுத்தும் வேகத்தை குறைத்து விடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டார்.

பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட  வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை வேறு பணிக்கு மாற்றப்படக் கூடாது எனவும் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்