மேற்கு வங்க வன்முறை விவகாரம்: "சிபிஐ விசாரணை வேண்டும்"- உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்

மேற்கு வங்க வன்முறை விவகாரம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேற்கு வங்க வன்முறை விவகாரம்: சிபிஐ விசாரணை வேண்டும்- உச்சநீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல்
x
மேற்கு வங்க வன்முறை விவகாரம் குறித்து, சிபிஐ விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து வழக்குரைஞர் எம்.எஸ். சுவிதத்  என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக, பாஜக  தலைவரும், வழக்குரைஞருமான கவுரவ் பாட்டியா தாக்கல் செய்த மனுவில், வன்முறை, கொலைகள் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் அபார வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, மூன்றாவது முறையாக இன்று காலை பத்து மணியளவில் முதலமைச்சராக பதவியேற்கிறார். 



Next Story

மேலும் செய்திகள்