ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து - ஆறு கடைகள் எரிந்து சேதம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள ஆஸ்தான மண்டபம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன.
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள ஆஸ்தான மண்டபம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. அதில் சுவாமி படம் தயாரித்து விற்கப்படும் ஒரு கடையில்  இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்,.இந்த தீ விபத்தில் 6 கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன,. மின்சார கசிவு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்