விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை

இஸ்ரோ வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்த கேரள போலீஸார் மீது உச்சநீதிமன்ற உத்தரவு படி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை
x
விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை 

இஸ்ரோ வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்த கேரள போலீஸார் மீது  உச்சநீதிமன்ற உத்தரவு படி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நம்பி நாராயணன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.  போலீஸ் விசாரணையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு ஒருகட்டத்தில் போலீசிடம் இருந்து சிபிஐ-க்கு மாறியது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே நம்பி நாராயணன் கேரள போலீசார் 3 பேர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வாதங்களை பரிசீலித்த நீதிபதிகள், இஸ்ரோ வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்த கேரள போலீஸார் மீதான நடவடிக்கை  எடுப்பது தொடர்பாக 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை அளிக்க சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்டனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ  வழக்கு பதிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்