குஜராத் மருத்துவமனையில் தீ விபத்தில் கொரோனா சிகிச்சை பெற வந்த 18 பேர் பலி - பிரதமர் இரங்கல்

குஜராத் மாநிலம் பரூச் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 18 பேர் உயிரிழந்தது, தீராத வலியை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மருத்துவமனையில் தீ விபத்தில் கொரோனா சிகிச்சை பெற வந்த 18 பேர் பலி - பிரதமர் இரங்கல்
x
குஜராத்தில் மருத்துவமனையில் தீ விபத்து - தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு 

குஜராத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.பருச் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் அதிகாலை 1 மணியளவில் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் வார்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மருத்துவமனையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், கடும் புகை காரணமாக நோயாளிகள் பலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், நோயாளிகளை மீட்டு வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சுமார் 18 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. 

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்தில் கொரோனா சிகிச்சை பெற வந்த 18 பேர் பலி - பிரதமர் இரங்கல்

குஜராத் மாநிலம் பரூச் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 18 பேர் உயிரிழந்தது, தீராத வலியை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்