கேரள மாநிலத்தில் கைதிகளுக்கு புதிய வசதி.. குடும்பத்தினருடன் காணொலி மூலம் பேச ஏற்பாடு

கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை அடுத்து குடும்பத்தினருடன் சிறைக் கைதிகள் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேச, கேரள சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் கைதிகளுக்கு புதிய வசதி.. குடும்பத்தினருடன் காணொலி மூலம் பேச ஏற்பாடு
x
கேரள மாநிலத்தில் கைதிகளுக்கு புதிய வசதி.. குடும்பத்தினருடன் காணொலி மூலம் பேச ஏற்பாடு

கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை அடுத்து குடும்பத்தினருடன் சிறைக் கைதிகள் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேச, கேரள சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.கொரோனா பரவலை தொடர்ந்து, கேரள  சிறைகளில் உள்ள கைதிகளை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கைதிகள் காணொலி மூலம்  குடும்பத்தினர் உடன் பேச உள்துறை அனுமதியுடன் , கேரள சிறைத்துறை புதிய மென்பொருள்   தயாரித்துள்ளது. இதை பயன்படுத்தி கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் காணொலி மூலம்  பேசிக் கொள்ளலாம்.முதற்கட்டமாக, வாட்ஸ் அப் மூலம் 3  மாதங்களுக்கு  சோதனை அடிப்படையில் இந்த வசதி பரிசோதிக்கப்பட்டது. இது  வெற்றிகரமாக  அமைந்ததை  தொடர்ந்து, கைதிகள் காணொலி மூலம் தங்கள் குடும்பத்தினருடன் பேசும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது.  2  வாரங்களுக்கு ஒருமுறை, 5 நிமிடங்கள்  கைதிகள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன்  பேசிக்கொள்ள முடியம்.  கேரளாவில் உள்ள 3 மத்திய சிறைகள் உட்பட 53 சிறைகளில் இந்த  வசதி  ஏற்படுத்தப்பட்டு  உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்