போலி ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிப்பு.. 5 பேரை கைது செய்து விசாரணை

போலி ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிப்பு.. 5 பேரை கைது செய்து விசாரணை
போலி ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிப்பு.. 5 பேரை கைது செய்து விசாரணை
x
போலி ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிப்பு.. 5 பேரை கைது செய்து விசாரணை 

உத்தரகாண்டில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் போலி ரெம்டெசிவிர் ஊசி மருந்து தயாரித்த கும்பல் சிக்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கு மத்தியில், வட மாநிலங்களில் போலி மருந்துகளும் நடமாட தொடங்கியுள்ளது. இதுகுறித்து விசாரணையை மேற்கொண்ட டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவார், கோட்வாரில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோத மருந்து தயாரிப்பு மையம் செயல்பட்டதை கண்டறிந்த போலீசார், போலியாக ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்த 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் ஒரு ரெம்டெசிவிர் மருந்து குப்பியை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்