இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி... நெல்லை எம்.பி. ஞான திரவியம் வலியுறுத்தல்

இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி... நெல்லை எம்.பி. ஞான திரவியம் வலியுறுத்தல்
இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி... நெல்லை எம்.பி. ஞான திரவியம் வலியுறுத்தல்
x
இஸ்ரோ மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி... நெல்லை எம்.பி. ஞான திரவியம் வலியுறுத்தல்

 மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் வாரத்திற்கு 42 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என தொகுதியின் எம்.பி. ஞான திரவியம் கோரிக்கை விடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது வாரந்தோறும் 14 ஆயிரம் கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு மருத்துவ சேவை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடிகிறது. இந்நிலையில், இஸ்ரோ மையத்தில் கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என நெல்லை எம்.பி. ஞான திரவியம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் சிவன், மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குனர் அழகுவேல் உள்ளிட்டோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் அதிக கொள்ளளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய கலன்கள் இருப்பதால், வாரந்தோறும் 42 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்