மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

x
மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 

மத்திய அரசு கொரோனா தடுப்பூசி வழங்கும் வரை காத்திருக்க மாட்டேன் என, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மே 1  முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றார். தேவையான தடுப்பூசி வழங்குமாறு மாநில அரசு மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இருந்தபோதும் தடுப்பூசிக்காக காத்திருக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார். தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தனி பரப்புரை தொடங்கப்படுள்ளதாக தெரிவித்த பினராயி விஜயன், மாநில அரசு வழங்கும் இலவச தடுப்பூசி பெறுவோர், முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு டோஸ் ஒன்றுக்கு 400 ரூபாய் நன்கொடை அளித்தப்பதே இதன் நோக்கம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கேரளாவில் உள்ள அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என, தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்